Sunday, June 9, 2019

ஒற்றை



ஜெ


வெண்முரசில் குருக்ஷேத்திரம் பலவாறாக வர்ணிக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது. ஆனால் இந்த வர்ணனைதான் உச்சம் என நினைக்கிறேன்

முட்டி மோதும் உடல்களும் படைக்கலங்களும் ஒற்றை விசையொன்றின் பல்லாயிரம் நெளிவுகளெனத் தோன்றுகின்றன. விசைகொண்டோடும் நாகம் போலவோ, தன்னில் தான் களித்து துள்ளிக் குதித்து சுழன்றாடும் குட்டிப்புரவி போலவோ, ஒற்றை உடலே எங்கும் நின்று கொந்தளித்துக் கொண்டிருந்தது.

ஒன்றோடொன்று மோதிக்கொள்ளும் படையை தனக்குத்தானே நெளியும் பாம்புபோலவோ துள்ளிக்குதிக்கும் கன்றுபோலவோ காண்பது என்பது அந்தச் சூதரின் மனநிலையை காட்டுகிறது. அவர் போரையே பார்க்கவில்லை. இரு தரப்பாகவே நினைக்கவில்லை. ஒன்றை ஒன்று கொல்லப்போகும் தரப்புகளாகவும் பார்க்கவில்லை. அவருக்கு ஒரு பெரிய கொந்தளிப்பு மட்டும்தான் கண்ணுக்குப் படுகிறது.


ராஜசேகர்