Friday, June 21, 2019

நாகாஸ்திரம்




அந்புள்ள எங்கள் ஆசிரியர் அவர்களுக்கு,

குண்தி தநது முதற்பிள்ளை ரகசியத்தை ஏன் இப்போதே கூருமாரு எழுதவில்லை.எந்று விளக்கியுள்ளிர்கள். கர்நன் ணாகாஸ்திரத்தை 17 ஆம் ணாளில் எவி கன்னன் காத்ததாகவே ணான் பார்த்த
தொடர்களிலெல்லாம் வரும்போது ணீங்கள் அது 14 ஆம் ணாள் இரவுப்போரிலேயே சல்லியர் தேரோட்டியாக வரும் முன்பு ணடண்துவிட்டதாக காட்டியதற்கு காரநத்தை
விளக்குமாரு வேன்டிக்கொள்கிரோம்.
அர்விந்த் ஆர்

அன்புள்ள அர்விந்த்

உங்கள் கடிதத்தை நிபுணர் உதவியுடன் மொழியாக்கம் செய்து புரிந்துகொண்டேன்.

கதையில் நாம் உருவாக்கும் குணச்சித்திரத்திற்கு ஏற்ப நாம் சில மாறுதல்களைச் செய்யவேண்டியிருக்கும். கர்ணன் நாகாஸ்திரத்தை கடைசிவரை எடுக்கவில்லை என்பது அவன் இயல்புக்கு உகந்ததாக இல்லை. பின்வரும் நிகழ்ச்சிகளுடன் பொருந்தவில்லை. அதை கதையை வாசித்துநோக்கினால் உணரமுடியும்

ஜெ