Tuesday, June 25, 2019

எழுவது


ஜெ

திரும்பவும் கார்கடலில் இருந்து வாசிக்க ஆரம்பித்திருக்கிறேன். ஒரே மூச்சில் பதினைந்து நாட்களுக்குள் நேராக இருட்கனியைக் கடந்து தீயின் எடைக்கு வந்துவிடுவேன். இது நான் எல்லா நாவல் இடைவெளிகளிலும் செய்துகொண்டிருப்பது


வரவிருக்கிறது பெருமழை என்று அஸ்வத்தாமன் எண்ணினான். அனைத்தையும் அள்ளிக்கூட்டிச்சென்று யமுனையில் கரைக்கும் மாமழை. புதுத்தளிர் எழச்செய்யும் வானருள். இடியோசை எழுந்து குருக்ஷேத்ரம் நடுங்கியது.

இந்த வரிகளை வாசித்தபோது உள்ளம் நடுங்கியது. மலைப்பகுதிகளில் மேமாதம் எல்லா செத்தை புல்லையும் எரித்துவிடுவார்கள். அதன்பின் புதிய விதைகளை வீசுவார்கள். இருட்கனியின் கடைசியில் நடைபெறுவது அதுதான்

மகாதேவன்