ஜெ
வெண்முரசில் சில பகுதிகள் தனியாக சென்று என்னை ஆழமாகக் கவர்ந்துவிடும். அவை உங்கள் வரிகள் அல்ல. வெண்முரசின் வரிகளும் அல்ல. அவை அந்தக் கதாபாத்திரத்தின் வரிகள். அந்த தருணங்களுக்கு உரியவை. ஆனாலும் அந்த வரிகளை அப்சலூட் ஆகவே எடுத்துக்கொள்ளத் தோன்றும்
ஆண் உடலில் கூடும் மானுட அழகு பெண்களிலோ குழந்தைகளிலோகூட எழுவதில்லை. குழந்தைகள் ஒவ்வொரு கணமுமென பிறிதொன்றாகிக் கொண்டிருக்கிறார்கள். பெண்களின் உடலோ தன்னளவில் முழுமை கொண்டதல்ல. அது பிறவற்றால் நிறைவு செய்யப்படவேண்டியது. ஆணால், குழந்தையால். ஆணுடலே முழுமை, தெய்வத்தின் உருவில் தான் அமைந்தது. ஆணுடலின் முழுமை அவன் உடல்.
என்ற வரி அத்தகையது. சுப்ரதர் அப்படித்தான் நினைக்க முடியும். ஆனால் அது உண்மை என்றே பட்டது. நான் தீர்த்தங்காரர்களின் சிலைகளைப் பார்க்கையில் இதையே நினைத்திருக்கிறேன். எந்த ஆடையணிகளும் இல்லாமல் வளைவுநெளிவுகள் இல்லாமல் நின்றிருக்கும் அந்த உடல்கள் மரங்கள் போல தோன்றும். அவற்றில் இருக்கும் நிறைவும் அழகும் எந்த உடலிலும் இல்லை
அதேபோல விலங்குகளில் அழகு ஆன்சிங்கம்தான். சிங்கமும் மனிதனும் இணைந்த நரசிம்மம் போல அழகான உடல் வேறு கிடையாது
ஆர்.ராகவ்