Monday, June 24, 2019

குண்டாசியின் கதாபாத்திரம்



குண்டாசியின் கதாபாத்திரம் ஒரு தனித்தன்மை கொண்டது. ஆரம்பத்திலேயே ஒரு வாக்குமூலமாக அவனுடைய குணச்சித்திரத்தை அவனே சொல்லிவிட்டான். 

உச்சகட்ட வெறுப்பும் சினமும் மூண்டு எழுகையிலேயே முற்றிலும் இயலாமையையும் அறியும் ஒருவனைப்போல இரக்கத்திற்குரியவன் யார்?” அவன் தொடர்ந்தான். “அவன் தன்னை கோமாளியாக்கிக் கொள்கிறான். அல்லது ஆணவம் மிக்கவனாக காட்டுகிறான். தன்னந்தனித்து நின்று உலகின் முன் அறமுரைப்பவனாகவும், ஊழால் பழிவாங்கப்பட்டவனாகவும், அநீதியாகப் புறக்கணிக்கப்பட்டவனாகவும் சித்தரித்துக்கொள்கிறான். தீமையே உருக்கொண்டவனாக தோற்றம் தருகிறான். அன்பு கொண்டு உருகி அழுகிறான். உலகை நோக்கி இறைஞ்சுகிறான். ஒவ்வொரு நாளும் ஒரு வேடம். ஒவ்வொன்றும் கடும் தன்னிரக்கத்திலேயே சென்று முடியும் 

தீர்க்கமுடியாத வன்மம். ஆகவே கடைசியில் ஒவ்வொரு கௌரவர்களாக அவனே தன் கையால் சிதையில் எரிப்பதை அப்படித்தான் புரிந்துகொள்ளவேண்டும். அது ஒருவகை வஞ்சம் நிறைவேற்றல். கடைசியாக தானும் சாகிறான். அவனுடைய கதாபாத்திரத்தை வாரணவதம் எரிப்பு முதல் குருக்ஷேத்திரம் வரை ஒரு நீண்ட தனிநாவலாகவே எழுதிவிடமுடியும் என தோன்றுகிறது


சத்யமூர்த்தி