அன்புள்ள ஜெ
சகுனியின் நகர்புகுதல்
ஒரு பெரிய ஓவியம்போல காட்டப்பட்டிருக்கிறது. அவன் நகர்புகுந்தது ஒரு பெருவெள்ளம் போல.
அஸ்தினபுரியை கங்கை கழுவிவிடுகிறது. ஒரு யுகம் முடிந்து இன்னொன்று தொடங்குகிறது. சகுனி
கொண்டுவரும் செல்வங்கள் என்னென்ன! எவ்வளவு பொருட்கள். ஆனால் அதற்குப்பதிலாக அவன் கொண்டுவருவதெல்லாம்
அழிவுதான். செல்வமே அழிவாக உருமாறி வருகிறது என நினைக்கிறேன்
நான் மழைப்பாடலை
வாசித்துக்கொண்டிருக்கிறேன். முதற்கனலை ஒரே நாளில் முடித்துவிட்டேன். மழைப்பாடலை அப்படி
முடிக்கக்கூடாது என்று கொஞ்சம் கொஞ்சமாக வாசிக்கிறேன்
ஸ்ரீனி வரதராஜன்