அன்புள்ள ஜெ
நான் வெண்முரசை சென்றவாரம் முதல்
ஆரம்பித்தேன். இப்போது வாசிப்பதிலுள்ள பிரச்சினை என்னவென்றால் ஒரேநாளில் இருபது அத்தியாயம்
வரை வாசிப்பது. மூச்சுவிடாமல் ஓடுவதுபோல. கதையோட்டம் அப்படி இருக்கிறது. ஒரு மாயநிலத்தில்
வாழமுடிகிறது. குறிப்பாக சிவிநாட்டின் சித்திரங்கள் அபாரம். அந்த பாறைக்குடைவு அரண்மனையும்
உள்ளே இருக்கும் பைத்தியக்காரரான பால்ஹிகரும் அந்தப்பாலைநிலமும் என்னை பித்துப்பிடிக்கவைத்தன.
சரியாக வாசிக்கிரேனா, எதையாவது விட்டுவிட்டேனா என்ற சந்தேகம் ஆட்டிப்படைக்கிறது. ஆனாலும்
நிறுத்த முடியவில்லை. இந்த வெறிமிகுந்த கனவு போதும் என்றுபடுகிறது
செந்தில்ராஜ்