அன்புள்ள ஜெ
நான் வெண்முரசின்
மிஸ்டிக்கான பகுதிகளைப் பற்றி மட்டுமே படித்துக்கொண்டிருக்கிறேன். அவை பெரும்பாலும்
இரண்டு வகையானவை. ஆழத்திற்குள் அமிழ்ந்து செல்லுதல். மேலே ஏறிச்செல்லுதல். இரண்டுக்கும்
என்ன வேறுபாடு என்று பார்க்கவேண்டும் என்று தோன்றுகிறது. நீரில் விழுந்து மூழ்கி ஆழத்திற்குச்
செல்கிறார்கள். மலைமேல் ஏறி மேலே செல்கிறார்கள். ஆழத்திற்குச் செல்லும்போதெல்லாம் கொடுங்கனவு
போல இருக்கிறது. மேலே செல்லும்போது ஒரு சப்ளைம் உணர்வு உருவாகிறது. அர்ஜுனன் இரண்டு
நிலைகளிலும் பயணம் செய்கிறான். ஆனால் ஆச்சரியமென்னவென்றால் யுதிஷ்டிரர் கீழே ஆழத்திற்குச்
சென்றதே இல்லை
எஸ்.பாலகிருஷ்ணன்