வெண்முரசு நாவல்களை தொடர்ச்சியாக வாசித்துக்கொண்டிருக்கிறேன்.
களிற்றியானைநிரை முடித்துவிட்டு மீண்டும் நீலம், இந்திரநீலம் படித்துவிட்டுத்தான் கல்பொருசிறுநுரைக்கு
வந்தேன். நீலத்தில் பிறந்த அச்சிறுவனின் முடிவு ஒரே நாவலாக என் மனசிலே விரிகிறதா என்று
பார்க்கவேண்டும் என்று தோன்றியது. ஆச்சரியமாக ஒரு விஷயத்தைக் கண்டேன். மூடிய வெண்பட்டை உதைத்து நழுவவிட்டு வெளிவந்து
செவ்விரல்குருத்துக்களை நெளித்து காற்றில் துழாவின அன்று பிறந்த சிறுமகவொன்றின் கால்கள்.
மலர்வெளியை ஒளிகுன்றச்செய்தது மணிநீலம்.என்று நீலம் நாவலில் முதலில்
ராதையின் பார்வை வழியாகத் தோன்றுவதே கண்ணனின் பாதங்கள்தான். அந்தப்பாதங்கள் தான் வேடன்
பார்த்தவையும்
மணிகண்டன் ஜி.ஆர்