அன்புள்ள ஜெ
ஜடரை வரும் பகுதியை
ஒரு வாசகர் சுட்டிக்காட்டி எழுதியிருந்தார். அப்பகுதியை நான் வாசித்தேன். ஓநாய்க்கும்
சகுனிக்குமான உரையாடல் ஒரு கிளாசிக் நாடகக்காட்சி போலிருந்தது. அதை ஒரு சிறுநாடகமாகவே
எவராவது எழுதி நடிக்கலாம்
அந்தப்பகுதியில்தான்
கணிகர் முதல்முறையாக அறிமுகமாகிறார். கணிகரின் முடிவை வாசித்தபின் அந்த இடத்தை வாசித்தபோது
திக் என்று இருந்தது. அங்கே ஜடரையின் வடிவில் தோன்றியது ஒரு தெய்வம் என்றால் கணிகராகத்
தோன்றியது இன்னொரு தெய்வம்
ஆடலரசன்