Saturday, August 22, 2020

குந்தியின் மனம்

 

அன்புள்ள ஜெ

மழைப்பாடலில் குந்தி துர்வாசரிடம் பேசும் ஓர் இடம் உள்ளது. குந்தி மனதாலெயே பிறரிடம் உரையாடும் திறமை கொண்டிருக்கிறள். துர்வாசர் அந்த ஆற்றல் மானுட குலத்துக்கே உரியது என்று சொல்கிறார். எல்லா உயிர்களையும் ஒரே மனமாக இணைக்கும் ஒரு பரப்பு அடியில் உறைகிறது என்கிறார்.

அந்த தவத்தையே அவர் செய்துகொண்டிருக்கிறார். வேதங்கள் உங்கள் உள்ளங்கள் சுருதியால் ஒன்றாகட்டும் என அறைகூவுவது இதைப்பற்றித்தான். ஆயிரமாண்டுகாலமாக மானுடஞானம் மண்ணுக்கு அடியில் விரிந்திருக்கும் அந்தக் கடலைக் கண்டடைவதற்காகவே முயன்றுகொண்டிருக்கிறது என்று சொல்கிறார்.

ஆனால் பின்னர் வெண்முரசில் குந்தியின் அந்தத்திறமை எங்கேயுமே வெளிவரவில்லை. அவள் அந்த விரிவை இழந்துவிட்டாள். அவளுடைய மனம் ஆசைகொண்டதாக ஆகிவிட்டது. சூழ்ச்சிகளால் சிக்குண்டவளாக ஆகிவிட்டாள்

ஆனால் கடைசியில் விதுரருடன் அந்த சொல்லில்லா உறவு அவளுக்குச் சாத்தியமாகிறது

பாஸ்கரன்