அன்புள்ள ஜெ
சமீபத்தில் கல்வெட்டுக்களைப்
பற்றி பேசிக்கொண்டிருந்தோம். பெரும்பாலான கல்வெட்டுக்களில் சூரியன் சந்திரன் உள்ளவரை
என்று சொல்லி சாசனம் செய்யப்பட்டிருக்கும். சூரியன் சந்திரன் உள்ளவரை தன் வார்த்தை
நிலைநிற்கவேண்டும் என்று ஒரு அரசன் ஆசைப்படுவதிலுள்ள வேடிக்கையைப்பற்றிச் சொன்னோம்
அப்போது வெண்முரசில்
வரும் வரி நினைவில் வந்தது. காலம்கடந்தவை என்று நாம் நம்புகிறோம் என்றால் அச்சொற்களை ஏன் கல்லில் பொறிக்கிறோம்? அச்சொல்லைவிட காலம்கடந்தது கல் என்று நம்புகிறோம் என்றல்லவா அதன் பொருள்? அந்த வரி களிற்றியானைநிரை நாவலில் வருகிறதென
நினைக்கிறேன். சிரிப்பை அளித்த வரி. ஆனால் ஆழமானவகையில் நினைவிலும் நின்றிருக்கிறது
ஜெயராமன்