அன்புள்ள ஜெ
இன்று வெண்முரசில் படித்த வரி இது ஊரென்பது புறத்தே நின்று உருவாக்கப்படக்கூடியது அல்ல. அம்மக்களின்
கோன்மையின் படிநிலையே ஊரென்றாகிறது. மன்னன் முதற்றே மலர்தலை உலகென்ற தொல்கூற்றின் வெளிப்பாடே
இந்நகரங்கள். இந்த வரியிலேயெ நின்றுவிட்டேன். எவ்வளவு உண்மை. ஒரு நகரின்மேல்
நின்று பார்த்தால் அங்கே இருக்கும் அதிகாரம் மிகத்தெளிவாக தெரியும். நாங்கள் லோத்தல்
சென்றபோது அங்கிருந்த நகர அமைப்பே அங்கிருந்த ஆட்சியமைப்பாகவும் திகழ்வதை அங்கே எழுதிவைத்திருந்தனர்.
ராஜேஷ்