அன்புள்ள ஜெ
வெண்முரசில் போர்பற்றிய பகுதிகளை மீண்டும் வாசிக்கிறேன். மகாபாரத சீரியலிலேயெ மிகவும் சலிப்பூட்டிய பகுதிகள் போர்தான். போர் எப்போதுமே சலிப்பூட்டுவது. ஏனென்றால் அது ஒரே மாதிரி திரும்பத்திரும்ப நடக்கும். டிராய் படமே கூட அதனால்தான் சலிப்பாக இருந்தது. ஒரிஜினல் மகாபாரதத்திலேயே போர்ப்பகுதிகளை வாசிக்கையில் ஒரே டேட்டாவாகவும் ஒரே மாதிரி வர்ணனையாகவும் இருந்தது. வெண்முரசிலே அந்தச்சவாலை எப்படி கடக்கிறீர்கள் என்று அப்போது பார்த்துக்கொண்டே இருந்தேன். அதை மிகச்சிறப்பாக முடித்தீர்கள்.
போருக்கு நுட்பமான டீடெயில்களை அளித்துக்கொண்டே இருந்தீர்கள். போரின் வெற்றியும் தோல்வியும் மாறிமாறி வருவதுபோல அமைத்தீர்கள். இன்றைக்கு வாசித்த அத்தியாயத்தில் சல்யர் போரிடுகிறார். அவர் ஓர் உத்தி வைத்திருக்கிறார். அவர் முதலில் ஒரு சிறிய அம்பைச் செலுத்துகிறார். அது போகும் வழியை கணித்து அடுத்த பெரிய அம்புகளை அனுப்புகிறார். அர்ஜுனன் வல்லூறுகளை நடத்தும் அந்த சிட்டுக்குருவிகளை தாக்கி அழிக்கிறான். அவரால் போரிடவே முடியவில்லை. அந்தப்பகுதி அற்புதமான ஒரு கற்பனை. வெண்முரசின் மொத்த போர் உத்திகளை தனியாக பட்டியலிடவேண்டும் https://www.jeyamohan.in/124032/
ஆர்.ரங்கராஜ்