அன்புள்ள ஜெ
ஒரு வாசகர் வெண்முரசின்
தத்துவ வாசிப்பைப் பற்றிச் சொல்லியிருந்தார். அதிலும் நான் ஒரு ஸ்கீமாவை சொல்லமுடியும்.
வெண்முரசின் தத்துவநூல்களின் வரிசை என்றால் கிராதம்தான் முதலில். அது வாருணம் ஐந்திரம்
முதலிய வேதங்களின் தோற்றம் முதல்பாசுபதம் வரை தத்துவத்திற்கு முந்தைய வரலாற்றைப் பேசுகிறது.
அடுத்து வண்ணக்கடல். அது சாங்கியம் நியாயம் யோகம் முதலியவற்றைப் பேசுகிறது. கடைசியாகச்
சொல்வளர்காடு. அது உபநிஷதங்களைப் பேசுகிறது. இவற்றின் தொடர்ச்சியாக இமைக்கணம். அது
ஐந்தாவதுவேதமாகிய கீதையின் உருவாக்கம் பற்றிப் பேசுகிறது.
சாரங்கன்.