Tuesday, August 11, 2020

பொதுவிவேகம்



அன்புள்ள ஜெ

வெண்முரசின் வரிகள் பலவற்றை நண்பர்கள் குறித்துவைத்திருப்பதுண்டு. அவை கவித்துவமான வரிகளாக இருக்கும். ஆனால் எனக்கு அப்படி மனதிலே நின்றிருக்கும் வரிகளெல்லாம் பெரும்பாலும் காமன்சென்ஸின் உச்சத்திலுள்ள வரிகள்

விழைந்த அனைத்தையும் அடையும்போது மேலும் விரைவில் முதுமை வந்தணைவது மானுடரில் பெரும்பாலானவருக்கு தெய்வங்கள் அளித்த விந்தையான தீச்சொல். [களிற்றியானைநிரை]

இந்த வரியை நான் கண்ணால் பார்த்திருக்கிறேன். பெரிய முதலாளிகள், நினைத்ததை எல்லாம் அடைந்திருப்பார்கள். ஆனால் நிம்மதி இருக்காது. உடலில் நோய் நிறைந்திருக்கும். வாழ்க்கையே முதிர்ச்சியடைந்து அழிவை நோக்கிச் சென்றுகொண்டிருக்கும்

இந்தமாதிரி வரிகளின் அழகு என்னவென்றால் மகாபாரதமே ஒரு வாழ்க்கைச்சித்திரம். அந்த சித்திரத்தில் வைத்து இந்த வரிகளை பார்க்கமுடிகிறது என்பதுதான்.

சாந்தகுமார்