Thursday, August 27, 2020

சீவகசிந்தாமணி


 

அன்புள்ள ஜெ

இந்திரநீலம் நாவலை வாசித்துக்கொண்டிருக்கிறேன். இது ஒரு கிளாஸிக் காவியத்தின் வடிவில் உள்ளது. நெருக்கமாகச் சொல்லவேண்டுமென்றால் சீவகசிந்தாமணி மாதிரி இருக்கிறது. சீவகன் எட்டு மணமகள்களை மணந்தது அந்த காவியத்தின் அமைப்பு. இதிலும் கிருஷ்ணன் எட்டு நாயகிகளை மணக்கிறார். காவியத்தின் கட்டமைப்பும் அப்படியே சீவகசிந்தாமணியை ஒட்டியே அமைந்துள்ளது. எட்டுபேருமே எட்டுவகையில் கிருஷ்ணனை நினைத்து ஏங்கி கைப்பிடிக்கிறார்கள். உண்மையில் இந்த எட்டு கதாநாயகிகள் என்பது கிருஷ்ணனின் கதையிலிருந்துதான் சீவகன் கதைக்கு வந்திருக்குமென நினைக்கிறேன்

ஜி. ராஜசேகர்