அன்புள்ள ஜெ
வெண்முரசின் பொன்வரிகளில் ஒன்று இது
தனியாகவே ஒரு அதிர்ச்சியை அளிக்கும் வரி. ஆனால் வெண்முரசின் பின்னணியில் ஆழமானது. பீஷ்மர் சத்யவதி முதல் அத்தனைபேரும் உலகுக்கும், தங்கள் சந்ததிகளுக்கும் பொறுப்பேற்றுக்கொள்கிறார்கள். அதுக்காகவே எல்லாவற்றையும் செய்கிறார்கள். அது தியாகம் என்றும் பாசம் என்றும் நினைக்கிறார்கள். அது ஆணவம். நுட்பமான ஆணவம். ஆணவம் அன்பிலிருந்தும் பரிவிலிருந்தும் கூட வரக்கூடும். எப்படி வந்தாலும் ஆணவம் என்றால் அதில் தன்முனைப்பு இருக்கும். தன்னையே மையமாக்கிய நினைப்பு அது. அதிலிருந்து அழிவும் வந்தாகவேண்டும்
கிருஷ்ணன்