அன்புள்ள ஜெ
வெண்முரசில் கர்ணன்
ஒரு மாபெரும் துயரக்கதாபாத்திரமாக வந்துகொண்டிருக்கிறான். கர்ணனின் கதையில் எப்போதுமே துயருண்டு. ஆனால்
இதில் துரோணரால் அவமதிக்கப்பட்டு அவன் பரசுராமரை தேடிச்செல்லும் இடம், அங்கே அவன் படும்
துயரம் நெஞ்சை கனக்கச்செய்கிறது. அவன் மண்ணோடு மண்ணாக படுக்கிறான். மண்ணில் முகம் அமைக்கிறான். புதைந்துவிட நினைக்கிறான். அந்த இடம்தான்
ஆழமாக பாதித்தது. ஏனென்றால் கொடுமையான துயரை அடைந்தவர்களெல்லாம் அப்படி மண்ணோடு மண்ணாக
விழுந்துவிடுவதை நான் பலமுறை பார்த்திருக்கிறேன். [நான் டாக்டர்] அவர்களுக்கு மண் என்ன
அளிக்கிறது? மண் உறுதியானது என்று நினைப்பதுண்டு. அதுதான் தாங்கிக்கொள்ளும். அம்மாவின்
மடியில் விழுவதுபோல மண்ணில் மனிதர்கள் விழுந்துகொண்டிருக்கிறார்கள்.
தட்சிணாமூர்த்தி.