அன்புள்ள ஜெ
வெண்முரசின் முதல்வாசிப்பில் சிலபகுதிகள் கிடைக்கின்றன. பலவிஷயங்கள்
கைதவறிவிடுகின்றன. அப்படி முக்கியமாக கைநழுவிப்போகும் விஷயம் என்னவென்றால் உருவகமாக
சொல்லப்பட்டிருக்கும் விஷயங்கள்தான்
கல்பொரு சிறுநுரையில் வரும் இந்தவரியை வாசித்துக்கொண்டிருந்தேன்.
ஒரு சின்ன வாழ்க்கையிலிருந்து பெரிய வாழ்க்கைக்குள் சென்ற எல்லாருக்குமே இதெல்லாம்
பொருந்தும். அவர்களில் காளிந்தி அன்னை கண்ணனைப் பற்றிக்கொண்டு அப்படியே வாழ்ந்துவிட்டாள்.
அவளுடைய மைந்தர்கள் தடுமாறுகிறார்கள்
எஸ்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி