அன்புள்ள ஜெ
வெண்முரசு நாவலில் ‘கர்மஞானம்’ வெளிப்படும் இடங்கள் சில உள்ளன. வெவ்வேறு தொழில்கள் செய்பவர்கள் அந்தந்த தொழில்கள் வழியாக அவர்கள் அடைந்த ஞானத்தையும் முக்தியையும் சொல்லும் இடங்கள் அவை என்று நான் சொல்வேன்.
உதாரணமாக பீமனுக்கு ஒரு சமையற்காரச் சூதர் ஞானத்தை வழங்குகிறார். ஒரு நீராட்டறைக்காரர் அர்ஜுனனுக்கு காமத்தைப்பற்றிய அறிவை வழங்குகிறார். குதிரைகளைப் பற்றி கர்ணனின் அப்பா அதிரதர் பேசும் இடமும் அதேபோலத்தான். எதிர்காலத்தில் இவற்றை மட்டுமே தொகுத்தால் ஒரு மிகப்பெரிய தொகுதியாக அமையும் என்று படுகிறது
ரா.கிருஷ்ணகுமார்