Wednesday, August 26, 2020

ஒரு வெண்முரசு பிரச்சினை


அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,


வெண்முரசு ஏழு வருடங்களாக வந்தது. நீங்கள் எழுத எழுத வாசித்தோம். மீள்வாசிப்பு செய்கிறோம். புனைவுக் களியாட்டக் கதைகள், கதைத் திருவிழா என நீங்கள் கதைகளாக எழுதி குவிக்க, வேறு எந்தத் தளங்களுக்கும் செல்லாமல் வாசித்தோம். இப்பொழுது  ஞானி பற்றிய தொடர்.   

பிழைப்பிற்கு செய்கின்ற வேலை தவிர, உங்கள் தளத்தில் வாசிப்பது என்று இருக்கும் உங்கள் வாசகரைப் போல, அதிமிகு கற்பனைக் கதைகளை அதிவேகத்தில் எழுதும் அமெரிக்க எழுத்தாளர் , ப்ரான்டன்  ஸென்டர்ஸன் (Brandan Sanderson) நாவல்களை, எழுத எழுத வாசிக்கும் வாசகர்கள் இருக்கிறார்கள்.  அந்த வாசகர்களில் ஒருவர் வெளியிட்ட இந்தக் காணொளியைப் பார்த்தேன். இதில் உங்களின் வாசகனையும், உங்களையும் கற்பனை பண்ணிக்கொள்ளலாம்.


அன்புடன்,
வ. சௌந்தரராஜன்
ஆஸ்டின்