Friday, August 28, 2020

கனவு

 


அன்புள்ள ஜெ,


நான் நவீன இலக்கியத்தில் பார்க்கும் குறைகளில் ஒன்று உண்மையில் நம் வாழ்க்கையில் மிகமிக முக்கியமான இடம் வகிக்கும் ரொமாண்டிக் ஆன தருணங்களை அதில் சொல்லமுடிவதில்லை என்பது. சொல்லும்போதே அது நவீன இலக்கியத்தின் அமைப்புக்குள் நிற்பதில்லை. ஆகவே அதை அடக்கிவிடுகிறார்கள். அல்லது கேலியோ அறிவுத்தர்க்கமோ கலந்துவிடுகிறது. சொன்னால் அது எளிமையான ரொமாண்டிஸிசமாகவும் நின்றுவிடுகிறது

வெண்முரசு அதற்கான கிளாஸிக்கான அமைப்பை எடுத்துக்கொண்டதனால் அதற்குள் இந்த ரொமாண்டிஸிசம் நிலைகொள்கிறது. மிக அற்புதமான காதல்தருணங்கள் ஏராளமாக இதற்குள் வந்துகொண்டே இருக்கின்றன. நான் திரும்ப வாசிக்கும்போது இந்த வரி என்னை மெய்சிலிர்க்க வைத்தது. 

கழுத்துகளும் நாணிச்சிவக்குமோ? தோள்கள் புன்னகைக்குமோ

ஏனென்றால் இது என்னுடைய அனுபவம். நானே உணர்ந்தது. ஒரு முதல் அனுபவம். அதெல்லாம் இன்றைக்கு இந்த 36 வயதில் கனவு போல. அந்த வரியை அற்புதமாகச் சென்றடைய முடிந்தது. நினைக்க நினைக்க இந்த ஒருவரியிலிருந்து மேலே செல்லவே முடியவில்லை


கே