அன்புள்ள ஜெ
மழைப்பாடலை இப்போதுதான்
படித்து முடித்தேன். இந்நாவல் 26 நாவல்களில் இரண்டாவது. ஒரு தொடக்கம்தான். ஆனால் இந்நாவலிலேயே
நான்கு தலைமுறைகள் வந்துவிட்டன. தலைமுறைகளின் கதையாகவே இது ஒரு முழுமையான நாவலாக அமைந்திருக்கிறது.
சத்யவதி,பீஷ்மர் ஆகியோர் ஒரு தலைமுறை. அம்பை அம்பிகை அம்பாலிகை போன்றவர்கள் இரண்டாம்
தலைமுறை. திருதராஷ்டிரன் பாண்டு மூன்றாம் தலைமுறை. பாண்டவர்களும் கௌரவர்களும் நான்காம்
தலைமுறை.
நான்கு தலைமுறையின்
கதை ஒரேவீச்சில் நிறுத்தமுடியாத வேகத்துடன் சொல்லப்பட்டுவிட்டது. ஏராளமான நிகழ்ச்சிகள்.
ஏராளமான உணர்ச்சிகரமான சந்தர்ப்பங்கள். அத்துடன் நாவலுக்குரிய அடிப்படையான முடிச்சும்
உள்ளது. ஒரு பெரிய களத்தை அமைத்து அதில் கேள்விகளை விட்டுவிட்டு முந்தைய தலைமுறை விலகிவிட்டது.
போரும் அமைதியும் போல ஒரு தனிநாவலை வாசித்த அனுபவம்
ஆர்.விஜயகுமார்