அன்புள்ள ஜெ
வெண்முரசில் சில
மயக்கநிலை இடங்கள் வருகின்றன. வண்ணக்கடலில் வரும் பீமன் கங்கையில் மூழ்கி நீருக்குள்
செல்லும் இடம், வெய்யோன் நாவலில் நீர்மாளிகையின் மயக்கப்பிம்பங்கள், சொல்வளர்காட்டில்
யுதிஷ்டிரர் உருகி உடலழிந்து மீளும் கந்தமாதன மலை, கிராதம் நாவலில் அர்ஜுனன் தேவருலகும்
நரக உலகுக்கும் செல்லும் இடங்கள், அர்ஜுனன் உத்தரைக்கு நடனம் கற்பிப்பும் அந்த காடு.
இந்த இடங்களெல்லாமே அந்த கதையோட்டத்தில் அப்படியே கடந்துவந்துவிட்டவை. அவற்றை மீண்டும்
வாசிக்கிறேன். ஆர்ட்டீசியன் ஊற்றுபோல அவர்களின் அன்கான்ஷியஸ் நேரடியாகவே வெளிப்படும்
இடங்கள் இவை என்ற எண்ணம் ஏற்பட்டது. இவற்றிலுள்ள பிம்பங்களையும், அவற்றின் அடியிலுள்ள
ஆர்க்கிடைப்புகளையும் ஆராய்வது மிகமுக்கிய்மான ஒரு வாசிப்பாக இருக்கும். ஜாய்ஸின் யுலிஸஸ்,
ஈக்கோவின் நேம் ஆஃப்த ரோஸ், ஃபூகோஸ் பெண்டுலம் போன்ற நாவல்களில் இத்தகைய செறிவான படிமக்குவியல்கள்
உண்டு. அவை மிக விரிவாக வாசிக்கவும் பட்டுள்ளன. வாசிக்கவேண்டிய ஒரு பகுதி இது
ராம்குமார்