Thursday, August 20, 2020

மழைப்பாடல் வாசிப்பு

 

அன்புள்ள ஜெ

இந்தச்சிறிய கால அளவிலேயே வெண்முரசின் மழைப்பாடலைக் கடந்துவந்துவிட்டேன். வாசிக்கவேண்டும் என்று 2014லேயே முடிவுசெய்தேன். ஆனால் அன்று 12 அத்தியாயங்கள் மட்டுமே படிக்கமுடிந்தது. அன்றிருந்த நிலைமை அப்படி. ஆனால் இன்றைக்கு ஓய்விருக்கிறது. இந்த நாளில் இதை வாசிக்கவேண்டும் என்று இருக்கிறது

வாசித்து அன்றன்று கதையைச் சுருக்கமாக அப்பாவுக்கும் அம்மாவுக்கும் சொல்லிக்கொண்டிருக்கிறேன். ஆரம்பத்தில் அவர்களுக்கு ஒரு திகைப்பு இருந்தது. ஆகவே அருட்செல்வப்பேரரசனின் மகாபாரதத்தில் உரிய பகுதியையும் சேர்த்து வாசித்துக் காட்டினேன். அவர்களுக்கு அது ஆர்வமூட்டுவதாக இருந்தது. கொஞ்சநாளிலேயே என்ன மாறுதல், ஏன் செய்யப்பட்டிருக்கிறது என்று தெரிந்துவிட்டது. அப்பா ‘வேதாந்த ரீதியா சொல்றார்னு தோணுது’ என்று சொல்லிவிட்டார்

மழைப்பாடலை முடிக்கிறேன். அம்மா அப்பா எல்லாருமே உணர்ச்சிவசப்பட்டுவிட்டார்கள் “மகாபாரதமே முடிஞ்சது மாதிரி இருக்கு” என்று அம்மா சொன்னார்

அருண்