Monday, August 17, 2020

நிலம்

 

ஜெ

ஐந்தாண்டுகளாக என் மனசில் நான் ஒவ்வொருமுறை வெண்முரசு வாசிக்கும்போதும் எண்ணிக்கொள்ளும் வரி இது

கண்ணுக்குத்தெரியாத கோடிமலர்கள் என் ஒவ்வொரு மயிர்க்காலிலும் மலர்ந்திருப்பதை உணர்கிறேனே? எவர் நடந்து செல்வதற்கான பாதை நான்?

நீலத்திலே வரும் வரி. இதை வாசிக்கும்போது ஒரு பெண்ணாக காதலின் உணர்வு, காதலனைப்பற்றிய உணர்வு, தன் உடலிலே அவனை உணரும் நிலை என்றுதான் உணர்ந்தேன்

ஆனால் கல்பொருசிறுநுரை வாசிக்கும்போது கடைசியில் அந்த பெண்ணின் உடல் பாரதமேதான் என்று தோன்றிவிட்டது

எஸ்.