அன்புள்ள ஜெ
வெண்முரசின் பக்கங்கள் முழுக்க திரும்பத்திரும்ப வருபவை என்னென்ன என்று எவராவது ஒருபட்டியல் போட்டால் நன்றாக இருக்கும். நான் பலமுறை அவ்வாறு கவனித்த விஷயம் என்னவென்றால் அவைமரியாதைக்காக நடக்கும் சண்டைகள்தான். எவரை எங்கே அமரச்செய்வது, எவருக்கு எவ்வளவு இடம். அதில் பூசல்கள் நடந்துகொண்டே இருக்கின்றன.
ஆனால் மகாபாரதத்தில்
அப்படி ஏதும் இல்லை. நான் மகாபாரதத்தை முழுக்கவே வாசித்தவன். இரண்டுமுறை பூர்ணபாராயணமே
செய்திருக்கிறேன். ஆகவேதான் கேட்கிறேன். ஒப்பிட்டு குறைவாக காட்டுவதற்காகக் கேட்கவில்லை.
புரிந்துகொள்வதறகாகத்தான் கேட்கிறேன்.
ஆர்.ராமானுஜம்
அன்புள்ள ராமானுஜன்
மகாபாரதத்தில்
மிகமுக்கியமான கதை சிசுபால வதம். அது அவை மரியாதை சம்பந்தமான போர். அதிலுள்ள அரசியல்
உள்ளடக்கத்தையே வெண்முரசு விரித்து எடுத்துள்ளது. வெண்முரசின் கலைப்பங்களிப்பே அதுதான்.
மகாபாரதத்தில் விதைகளாக உள்ளவற்றை வளர்ப்பது
ஜெ