Thursday, June 4, 2015

தெரிந்த கதை



அன்புள்ள ஜெ,

பெரும்பாலும் அனைவருக்கும் தெரிந்திருக்கக்கூடிய விஸ்வாமித்ரர் மேனகை கதைதான்.  எழினிகளை ஒவ்வொன்றாய் விலக்கி கதைக்குள் அழைத்துச் செல்லும்போது புதிதாக பிறந்துவருகிறது.

'உவகைச் சொல்முளைத்த இதழ் என' திரை விலகுவது பிரமிப்பூட்டும் படிமம்.    நாடக அரங்கில் அரைவெளிச்சத்தில் நம் இருப்பை மறந்து அமர்ந்திருக்கும் பிரமை ஏற்படுகிறது.  

பெரும் தொன்மம் தனக்கான மொழியை கண்டடைந்திருப்பது (எப்போதும்போல) வியப்பூட்டுகிறது!  உடைமையற்ற முனிவர் சோலையை மட்டும் தனதாக்கிக் கொண்ட அபத்தத்தை மேனகை சொல்வது போன்ற பல திறப்புகள்...

புத்தம்புதிய தொன்மத்தை(!) ஆக்கியளித்ததற்கு வாழ்த்துக்கள்!
 
சீனிவாசன்