ஜெ,
இந்திரநீலம் தனிமையிலிருந்து துவங்குகிறது. எப்படிப்பட்ட தனிமை! மலைமுடியின் தனிமை. நீலகிரி மலையின் முடியில் நண்பர்களின் அருகாமையின் விளைவான இந்த துவக்கம், தனிமையில் துவங்குவது எங்ஙனம்?!
விண்ணின் கணக்கில் பெருங்கடல்களும் பனித்துளிகளே
ஊட்டியில்,
படிம அரங்கில் நான் என் நினைவுக்கு கொண்டு வர முயன்று தோற்ற, தாகூரின்
கவிதை வரி ஒன்று இவ்வரியிலிருந்து எழுந்து வந்தது. பனித்துளி ஒன்று ஏரியைப்
பார்த்து கூறும்
"தாமரை இலையின் கீழ் உள்ள பெரிய நீர்த்துளி நீ;
அதன் மேல் உள்ள சிறிய நீர்த்துளி நான்."
விண்ணிறைந்த முழுமுதல் தனிமைக்குப்பெயரே பிரம்மம்.
முற்றான
அந்த தனிமையை அடைவதற்கு குணிகர்க்கரும், அவர் மகளும் இருமையின் வழியை
நாடவேண்டியிருக்கிறது. தனிமையின் வழியிலேயே அங்கு செல்ல இயலாதா?
நன்றி
கார்த்திகேயன்