Sunday, June 21, 2015

அகழ்தல்

அன்புள்ள ஜெ

சிசுபாலனுக்கு காட்சியளித்த ஏழன்னையரின் கதை அருமை. கண்ணனுக்கு கொடையளிக்கும் ஏழன்னையரின் மறுபக்கம் அவர்கள்.  கொடுப்பவர்கள், வெல்பவர்கள். ஏழன்னையரின் இயல்புக்ளையும் எப்படித்தான் இந்தச் சமயங்களுக்காக சரியாகப்பொருத்துகிறீர்கள் என்பது ஆச்சரியமாக இருக்கிறது. கன்ணனுடனான உறவைப்பற்றிப்பேசும்போது வராகி அன்னை பொறாமையின் குறியீடாக ஆகிறாள். இங்கே அவளே மண்ணில் புதைந்தவை சென்றுசேரும் பாதாளத்தை அகழும் தெய்வமாக வருகிறாள். அதைவிட பன்றிமுக வராஹியை பன்றிமுகம் கொண்ட பூவராகரிடம் சம்பந்தப்படுத்தியது கிளாஸிக் உதாரணம்

சாரங்கன்