அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு
சியமந்தக மணிதான் கோஹினூர் வைரமா? இரண்டுக்கும் தொடர்பு உண்டா?
சிவக்குமார்
சென்னை
அன்புள்ள சிவக்குமார்
அப்படி ஒரு நல்ல புனைவு இந்தியில் எழுதப்பட்டது
ஆனால் அப்படி இருக்க வாய்ப்பில்லை. கோகினூர் கோல்கொண்டாவில் கிடைத்தது, விஜயநகர மன்னர்களிட்ம் இருந்தது என்பதெல்லாம் வரலாறில் தெளிவாகவே உள்ளது.
ஆனால் சியமந்தகம் போன்ற அரிய மணிகள் எளிதில் மறைந்துவிடாது. ஆகவே எங்கேனும் இருக்கலாம். கோயில்களின் கருவூலங்களில். தெய்வங்களில் நகையாக. எங்கேனும்
ஜெ