Thursday, June 18, 2015

மாளா மழை


மழைப்பாடல் நாவல் இரண்டாம்பதிப்பாக வெளிவந்துள்ளது. சொல்லப்போனால் மூன்றாம் பதிப்பு. செம்பதிப்பும் பொதுப்பதிப்புமாக இரண்டு நூல்கள் வந்து அவை ஒருவருடத்திற்கும் குறைவான காலத்தில் விற்றுமுடிந்திருப்பதை தமிழ்ச்சூழலை வைத்து நோக்கினால் வியப்புக்குரியது என்றே சொல்லவேண்டும். இந்த வரவேற்பு நிறைவளிக்கிறது

மழைப்பாடலில் இருந்து வெண்முரசு வெகுவாக நீண்டு சென்றுவிட்டது. நிகழ்வுகள் உணர்வுகள் வளர்ந்து பேருருவம் கொண்டுவிட்டன. ஆனால் இப்போது பார்க்கையில் மொத்தநாவல் வரிசையின் விதைகள் அனைத்தும் இப்பகுதியில் புதைந்து கிடப்பது வியப்பளிக்கிறது. மழைப்பாடல் தன்னளவில் குட்டி மகாபாரதம்.வெண்முரசின் ஊற்றுமுகம் இது.  வெண்முரசு முழுக்க வந்துகொண்டிருக்கும் அன்னையரின் கதைகள் இங்குதான் தொடங்குகின்ரன

மழைப்பாடலின் முதற்பதிப்புகளை வெளியிட்ட நற்றிணை பதிப்பகம் யுகன் அவர்களுக்கு நன்றி. இப்பதிப்பை செம்மைப்படுத்தி உதவிய நண்பர் ஹரன் பிரசன்னாவுக்கும் நன்றி

ஜெ

கிழக்கு வெளியீடான மழைப்பாடல் இரண்டாம்பதிப்புக்கான முன்னுரை