Friday, June 5, 2015

தன்முகம்



வழக்கம் போல இந்த நாவலின் தொடக்கமும் எப்படி மையக்கதையுடன் இணையும் என்று அறிய ஆவலுடன் காத்திருக்கிறேன். ஆனால் என்ன ஒரு தொடக்கம்! அந்த மொழி... !

குணிகர்க்கர் முகம் பார்ப்பதற்கும் கர்ணிகை முகம் பார்ப்பதற்குமான வேறுபாடு என்ன? குணுகர்க்கரின் துறவும் சரி, அந்த முகம் காணும் கணமும் அதை தொடர்ந்து எல்லாம் அழகாகும் கட்டமும் சரி, மிக இயல்பானவை. அவர் யாருக்காகவும் பாவனை செய்யவில்லை. ஆகவே அதில் அந்தத உணர்வுகளை தவிர வேறெதுவும் இல்லை. ஆனால் கர்ணிகையின் துறவு வலிந்து உருவாக்கப்பட்ட ஒன்று. ஆகையாலேயே அது குற்றவுணர்வுடன் பிணைந்திருக்கிறது என்று படுகிறது. 

அத்தியாயத்தை படித்து முடித்ததும் நார்சிசிஸ் பற்றி கொஞ்சம் இணையத்தில் மேய்ந்தேன். ஏதோ ஒரு வகையில் இந்த அத்தியாயம் நார்சிசிஸின் கதையை மீளுருவாக்கம் செய்வதாக பட்டது. ஆனால் சரியான பிடி கிடைக்கவில்லை.... 

சித்தார்த் வெங்கடேசன்