அன்பு ஜெமோ ,
யாழிச்சைக்காத சூதரே , பொருள் யாசிக்காத பாவலரே !
கதை தேடி நீலம் புரட்ட கனவுலகில் விழுந்துவிட்டேன்
கவிதைதான் மொழியின் உச்சம் ஆனால் நீலம் அதையும் முட்டுகிற து
உவமைக்கு காளிதாசன் உறுத்துகிறதோ அது உமக்கு
மொழியின் ஆட்டம் கன்றின் துள்ளல்
திசையறியாது அணைத்தையும் அள்ள ஓடித்தேடி
கடைசியில் தாய்பசு நினைவு வர அதன் மடியில் தஞ்சம்.
அனைவரும் அறிந்த கதைதான் ராமாயணம் மகாபாரதம்
அவற்றையே கடவுளின் எழுத்தாக பாராயணம் செய்யும் குலத்தில்
இருந்துவந்ததால் என்னவோ எனக்கு ஓர் இன்ப அதிர்ச்சி .
நம்மைபோல் விளையாடிய மாந்தர்கள் கடவுளாக மாறும் ஒரு களம்
காமம் விரகமாய் காதலாய் கடவுளாய் உயரும் காவியம் நீலம்
அத்துனை பெண்கள் பெயர் முடிவில் மறந்தேன் என் பெயர்
முதல் அத்தியாயம் முடிந்து இரண்டாம் 'பெயரோடு' துவங்க
மீண்டும் ஒருமுறை முதல் அத்தியாயம் மிகவும் மோசமையா உமது எழுத்து
நீலத்தை முடிக்கமுடியுமா முயற்சிக்கலாம் அதுஎன் உரிமை
மற்ற தலைமுறைக்கும் சிறிது விட்டு செல்லும், போதும் உம் பேராசை !
சன்னதம் கொண்டு விளையாட வந்துவிட்டீர், வியாசன் என்பது ஒருபதவி போலும் !
அவனுக்கு எழுதிய கை நடுங்க காத்திருக்கிறான் கணேசனும்
எந்த யானையின் தந்ததிற்கு விடுதலையோ உமுக்கு எழுத!
வியாசனுக்கு பல சிக்கல்கள் அனுஷ்டுப் சந்தம் ,மாத்திரைகள் .செம்மொழி
ஸ்லோகம், சுரம்,இறையுறுதி களம் -மணனம் செய்ய கொடுத்தாள்வதே அவன் வேலை
ஆனால் உமக்கு உரைநடை எழுத்து ,முற்றிய தமிழ் ,பகுத்தறிவு (சிறிது நாத்திகம் கலந்து!)
எல்லா வசதிகளும் உண்டல்லவா போட்டு தாக்கவேண்டியதுதான் பாக்கி ,உமது மகாபாரதம்
கவியால் கதை எழுதும் புதிய மொழி -புராதனம் தொன்மம் சொல்ல உமக்கு
வசதியான சூதர்கள் ,ஆய்சிகளின் கனவுகள் ,சத்தியம் செய்யும் நிமித்திகர்கள்
கிரேக்க இதிகாசங்களுக்கு ஒரு சவால் போலும் !
வார்த்தைகளின் உச்சம் சொல்,
சொற்களின் உச்சம் கவிதை
கவிதையின் கொண்டாட்டம் பாட்டு
எதுகை மோனையின் துள்ளாட்டம் இந்த நீலம் .
இனி முப்பெரும் இசை மூர்த்திகள் போல்
ராகம் ,தாளம் குறிப்பு மட்டும் தான் பாக்கி
இதையே நீர் செய்தாலும் வியப்பில்லை !
படைபூக்கத்தையும் (காமம் ), அழிவாட்டதையும்
இறை அற்பனமாக்கும் ஒரு காவியம் நீலம்
"அழியாதது அழகல்லவே !"
அன்புடன்
சிங்கை முரளி
(முரளி நடராஜன்)