Tuesday, June 23, 2015

சென்னை வெண்முரசு சந்திப்பு - ரகுராமன்

சென்னை சந்திப்பு


முல்லைக்கு (இந்த்ர நீலம் படித்த பிறகு “ல்” என்ற வார்த்தையை சேர்க்கவே கஷ்டம் ஆக இருக்கிறது!!) வெறும் தேர் மட்டும் தான் கொடுத்தான் பாரி, ஆனால் சௌந்தரோ இடமும் கொடுத்து, தேநீர், பலகார்த்துடன் இரவு உணவையும் தயாராக வைத்து இருந்த்தார். சுதா ஸ்ரீநிவாசன் அவர்களும் கேசரி, முறுக்கு என நிறைய கொண்டு வந்து இருந்தார்கள்.

Google map லிங்க் கொஞ்சம் சரியாக கொடுக்க படாததால், அனைவரும் வடபழனி முருகன் கோயிலை ஒரு பிரதிஷ்டை செய்து கொஞ்சம் கால தாமதம் ஆகவே வந்து சேர்ந்தார்கள். செந்தில், முத்துராமன், ஸ்ரீநிவாசன் தம்பதியினர், காளி, சுரேஷ் போன்ற தெரிந்த முகங்களை தவிர்த்து சுவாமி, பால முருகன், கவிதா என மூன்று  புது முகங்களும் (எனக்கு) வந்து இருந்தனர்.

காளி வெண்முரசின் தலைமுறைகள் பற்றி பேச ஆரம்பித்தான். அவன் இரண்டு நாட்கள் முன்னரே தொலைபேசியில் பேசும் பொழுது , “மாப்ளே, தெரியாம தலைப்ப தேர்ந்து எடுத்துட்டேன், அது போய்ட்டே இருக்கு என புலம்பி கொண்டு இருந்த்தான். அவன் பேச ஆரம்பிக்கும் பொழுதுதான் தெரிந்தது இது நிஜமாகவே சாதாரணமான வேலை இல்லை என்று. பெரும் நாகங்களின் சுழற்சியை விவரித்து அவன் தலைமுறைகளை பற்றி  சொல்ல தொடங்கினான். பிரம்மதில் இருந்து விஷ்ணு, அவன் மூலம் பிரம்மன், பிறகு எழு பிராஜபதிகள், பிறகு ஒவ்வொரு அரசரின் பெயர்கள் என சொல்லி கொண்டு இருந்தான். யயாதிக்கு பிறந்தவர்கள் அவனக்கு இளமையை தர மறுத்திட, புரு மட்டும் தர ஒப்பு கொண்டு அவன் மூலமாக குரு வம்சம் வளர தொடங்கியது, நாட்டில் இருந்து துரத்தபட்ட யது என்ற அவனின் ஒரு மகன் வேறு நிலம் நோக்கி சென்று அங்கு இருந்து யாதவ குலம் தோன்றியதையும், இன்னொரு மகன் பாலை நாட்டிற்கு (காந்தாரம்) சென்று அங்கு இருந்து இன்னொரு குலம் தோன்றியதையும். கடைசியாக அவர்கள் மறுபடியும் குரு வம்ஸதிர்கே (காந்தாரி மற்றும் குந்தி) வருவதையும், சிபி குலம், அசுர குலம் என அனைத்து தலைமுறைகள் பற்றியும் விஸ்தாரமாக விளக்கி சொன்னான். ஸ்ரீநிவாசன் இதை ஒரு “Family Tree” போல கீழ் இருந்து மேழாக வரைந்த்தால் நன்றாக இருக்கும் என சொன்னார்.

சரியாக நான் பேச ஆரம்பிக்கும் பொழுது அன்றைய “அரங்க நாயகன்” ராஜகோபால் வந்தார். அவர் வந்தவுடன் சபை களை கட்ட தொடங்கியது. எங்கே நான் “ ஈரோடு கிருஷ்ணரை” பற்றி பேச போகிறேனோ என்று சில நண்பர்கள் பீதி கொண்டனர், பிறகு நான் புராண கிருஷ்ணரை பற்றி பேச போகிறேன் என்ற பொழுது அனைவரின் கண்களிலும் ஒரு ஆழ்ந்த அமைதி தெரிந்தது. நான் பேசியது மற்றும் அதை தொடர்ந்த விவாதம் தனியாக
 
மணி எட்டுஅரை ஆகி விட்டதால், அத்துடன் அரங்கை முடித்து கொண்டோம். செந்தில் வெண்முரசிற்கு ஒரு மூன்று நாள் முகாம்      ஆகஸ்ட் யில் நடத்த திட்டமிட பட்டு கொண்டு இருப்பாதாக கூறினார். 
அதற்கு ஸ்ரீநிவாசன், “ஜெ, வெண்முரசு வாசகர்கள் மீது பெரும் நம்பிக்கை வைத்து இருப்பதாக, நாம் பல இடங்களில் வெறும் சாதாரணமான புரிதல்களைய்தான் கொண்டு இருக்கிறோம் என்று தெரிந்த்தால் பெரும் ஏமாற்றமும் கோபமும்  அடைவார் என்று சொன்னார்”. மற்றவர்கள் இல்லை ஜெ அப்பிடி நினைக்க மாட்டார் என்று பேசி கொண்டு இருந்த்தோம்.


இனிப்புடன் கூடிய இரவு உணவு பரிமாறபட்டது. ஜாஜா ஜெயுடனான பயண அனுபவங்கள், ஜெ சொன்ன பேய் கதைகள், குறட்டை காவியங்கள் பற்றி சொல்லி கொண்டு இருந்தார். மாதா மாதம் இதே போல் கூட்டம் நடத்த வேண்டும் என்று அனைவரும் சொல்லி கொண்டே இருந்தார்கள். ஸ்வாமி என்னுடன் என் வாகனத்தில் வந்தார்.  
ரகு ராமன்