Monday, June 15, 2015

யாதவ வரலாறு

அன்புள்ள ஆசிரியருக்கு,
       வெண்முரசில் யாதவ வரலாறு வரும் பகுதிகள் எல்லாம் தனியோரு அழகுகொள்கிறது,அது பிற குடிகளை போல ஆர்பாட்டமில்லாமல் நமக்கு மிக பரிச்சயமான கிராமிய சூழல்,முங்கில் படல்கள்,சாணம் மொழிகிய குடில்கள்,என மனதில் ஆழமாக பதிகிறது.
      சத்திய பாமா-அவளொரு ஆணவம் கொண்ட கண்ணணின் இரண்டாவது மனைவி என்று மனதில் இருந்த பிம்பத்தை அழிந்து ,அவளும் ஒரு ராதைதான் என்று எண்ணவைத்துவிட்டீர்கள்.திருமணத்தில் செய்யும் சப்தபதி என்னும் சடங்கையே பாமை எழு அடிகளாய் எடுத்துவைத்து,அடிக்கு ஒரு வாக்குகொடுத்து அவனை தன் கணவனாய் ஏற்றுக்கொல்கிறாள்.
நன்றி
குணசேகரன்