ஆம் ரகு,
ஜெ பல தடவை சொன்னது போல், படைப்பாளியின் உழைப்புக்கும், கற்பனை சக்திக்கும் இணையான , உழைப்பு நமக்கு இல்லாத போது, அந்த படைப்பின் உச்ச கட்ட, புரிதல் சாத்தியமே இல்லை, அந்த வகையில் ''இந்திர நீலம்'', நம்மிடையே சவாலும், கற்பனையும்,உழைப்பும் எதிர்பார்க்கும், ஒரு மிகப்பெரிய முயற்சி.
' நீலம்' நாவலின் பித்துநிலையும், மற்ற 6 தொகுப்பின் கற்பனை, தகவல்கள்,நுட்பம், புரிதல்கள், தத்துவம்,காமம், நுண்ணுணர்வு, இன்றி இதன் முழுமையான புரிதல் சாத்தியமே இல்லை.
'ஓம் சர்வகல்விதமேவாஹம் நான்யாஸ்திசனாதனம்!”- இதை மனனம் செய்திராத வென்முரசு வாசகர் மிகவும் குறைவு.
நீங்கள் அடைந்த அதே மனோ நிலையை தான் நுண்ணுணர்வு கொண்ட அத்தனை வாசகரும் அடைந்திருப்பர்.
இங்கே நீலத்தின் மறு வாசகர்கள் அநேகம் பேர் உண்டு. ஒரே ''கவிதை தனமா இருக்கு'' என்று, ஆரம்பத்தில், தடுமாறி, பின் முழுமையாக உள்ளிழுக்கப்பட்டு, இப்போது மறுவாசிப்பு செய்துகொண்டிருக்கிறேன் .
நம் உழைப்பு ரொம்ப்ப முக்கியம் கணக்கரே.....
சௌந்தர்