Saturday, June 27, 2015

கற்பனை

மதிப்பிற்குரிய ஜெயமோகன்,


       தங்களின் ''வேன்முரசு'' நாவலை படித்துக்கொண்டிருக்கிறேன். அத்தகு நாவலுக்கு தங்களின் கற்பனை சுதந்திரம் எத்தனை முக்கியமானது என்பதை உணரும்போதே வியக்கிறேன். உள்ளிருக்கும் சக்தியை கொண்டு மட்டும் அதுபோன்றதொரு நாவலை எழுதிவிட முடியாது என்பது என் நம்பிக்கை. 
      இது போன்ற நாவலை எழுதும் தங்களால் , சினிமாவுக்குள் தங்கள் கற்பனையை எப்படி குறுக்கி கொள்ள முடிகிறது ?? 
     கவிஞனுக்கும் பாடலாசிரியனுக்கும் உள்ள வித்தியாசம் தானே எழுத்தாளனுக்கும் சினிமா வசனகர்த்தாவுக்கும் உள்ளது?? அதுவும் ஒரு சில பெரிய பெயர்களுடன் நீங்கள் எழுத்து வேலை செய்யும் பொது , தங்களின் சுதந்திரம் பாதிக்காமல் எப்படி பார்த்துக்கொள்ள முடிகிறது??

தங்களின் பதில் வேண்டி ,  
ஏகலவ்யர்களில் ஒருவன்,
இல. ராம்ப்ரசாத் .
 
அன்புள்ள ராம் பிரசாத், சினிமாவில் என் கற்பனைக்கு பெரிய இடமில்லை. அது தொழில். அது இயக்குநரின் படைப்பு. அதில் ஒளிபதிவாளர், கலை இயக்குநர் போன்றவர்கள் அவருக்கு உதவுகிறார்கள். அதைப்போன்ற ஒரு பங்களிப்பே என்னுடையதும்
 
ஜெ