Saturday, June 13, 2015

ஏழாம் அடி

அன்பின் ஜெமோ,


எப்பொழுதும் போல் இன்றைய காலையும்  வெண்முரசுடன் துவக்கினேன் ‘இந்திரநீலம்’ 11. கணங்கனை யுகங்களாக்கி யுகங்களை சிறு துளியாக்கும் வல்லமை இலக்கியத்திற்கு மட்டுமே வாய்த் துள்ளது. பாமையின் ஏழு அடியை தங்கள் விவரித்த விதம் எந்த கற்பனைக்கும் அப்பாற்பட்டது. இந்த ஒரு அத்தியாயத்திற்கு மட்டும் ஏழு ெ நாபேல் பரிசுகளை பரிந்துரைக்கலாம். 
ஒன்று மட்டும் நிச்சயம். கம்பராமாயணம் பல நூறாண்டு கடந்து வாழ்வது போல் ஜெமோவின் வெண்முரசு பல்லாயிரம் ஆண்டு வாழும். கம்பனைப் போல், வள்ளுவனைப் போல்  என்று பேசும் கூட்டத்திற்கு ஜெயமோகனையும் போல என்று பேச வேண்டிய நிர்பந்தத்தை வெண்முரசு உண்டாக்கிவிடும் (அடுத்த நூற்றாண்டில்தான்). தமிழில் திருக்குறள், கம்பராமாயணம் வரிசையில் சொல்ல வேண்டும் என்றால் வெண்முரசு வெகு நிச்சயம் அந்த தகுதியை ெபறும். இன்று வாழும் இலக்கியவாதிகள் இது நிகழவிடமாட்டார்கள். நிகழும் போது தடுக்க உயிருடன் இருக்கப்போவதில்லை. 

நிறைய தடவை வெண் முரசு படித்த பின் மின்அஞ்கல் அனுப்ப வேண்டும் என நினைப்பேன். அது மன அஞ்சல் வடிவிலேயே நின்று விடும். இன்று ஏதோ தோன்றியது. உடன் எழுதிவிட்டேன். தற்பொழுது கனடா, அமெரிக்க பயணத்தில் இருப்பீர்கள். பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.

அன்புடன்,
ரமேஷ்

அன்புள்ள ரமேஷ் அவர்களுக்கு

நன்றி

இப்போது டொரெண்டோவில் இருக்கிறேன். கடிதங்களை ஒட்டுமொத்தமாக வாசிக்க கொஞ்சம் நேரம்

பாமாவின் ஏழு அடிகள் அந்தக்கணத்தில் எனக்கே பெரிய திறப்பாக அமைந்தது. குறிப்பாக ஏழாவது அடி

ஜெ