Sunday, June 28, 2015

அசைவும் மொழியும்

அன்புள்ள திரு.ஜெயமொஹனுக்கு,

ஒரு TED வீடியோ பார்த்த போது, இந்த அத்யாயத்தின்
"நூல் ஆறு – வெண்முகில் நகரம் – 45, பகுதி 10 : சொற்களம் – 3", ஒரு பகுதி நினைவுக்கு வந்தது.

முதியவரான தேவபாகர் தன் தந்தை சொன்ன நுண்மொழி மறவாமலிருப்பதற்காக ஒவ்வொரு நாளும் காட்டில் அசிக்னி ஆற்றின் விரிந்த மணற்கரையில் தன்னந்தனியாக அமர்ந்து ஓசையின்றி அச்செய்யுளை ஏழு முறை சொல்லிக்கொள்வது வழக்கம். அதைக் கேட்கும் தொலைவில் அவர் எவரையும் நிற்கவைப்பதில்லை. தன் இதழசைவை எவரும் காணலாகாதென நீர்வெளி நோக்கி திரும்பி அமர்ந்திருப்பார். அவருக்குப்பின்னால் புதருக்குள் அமர்ந்திருந்த கிரிஜன் ஒரு மென்பஞ்சுத்துகளை காற்றில் விட்டு அது அவர் முன் வாயருகே பறக்கச்செய்தான். அவரது உதட்டசைவில் மென்பஞ்சுப்பிசிறு கொண்ட அசைவைக் கண்டு அச்சொற்களை உய்த்தறிந்தான். நுண்மொழியைக் கற்ற மறுநாளே ஆசிரியரின் அடிபட்ட மண்ணைத் தொட்டு நெற்றியில் இட்டபின் திரும்பி தண்டகாரண்யம் சென்றான்.

அதன் டிஜிட்டல் version இங்கே.
http://www.ted.com/talks/abe_davis_new_video_technology_that_reveals_an_object_s_hidden_properties

பகிற்வதில் மகிழ்ச்சி, தங்களுக்கு நன்றி!!

அன்புடன் ,
நகுல் ஸ்ரீவத்ஸா