அன்புள்ள ஜெ
பிரபாச க்ஷேத்திரத்தில் நிகழும் அழிவின்போது எனக்கே
ஒருவகையான நிறைவு உருவாகியது. அவ்வளவு பெரிய அழிவை குருக்ஷேத்திரத்தில் உருவாக்கியவன்
அதை எதிர்கொள்ளத்தான் வேண்டும் என்ற ஒரு வகையான கசப்பு. அது நடந்து முடிந்தபோது ஒரு
கசப்பான திருப்தி. இப்படித்தான் வாழ்க்கை இருக்கிறது
கிருஷ்ணன் அந்த யாதவக் கிராமத்தில் ஒரு சொல்கூட
பேசாமல் குழந்தைகளுடன் விளையாடிக்கொண்டு இயல்பாகவே மண்ணிலிருந்து செல்வதில் ஒரு மகத்தான
விடுபடல் உள்ளது. அவ்வளவுதான், அவதார நோக்கம் நிறைவேறிவிட்டது. இனி என்ன என்ற நிலை.
அந்தநிலையை ஒரு நாவலில் எழுதிக்காட்டுவது சாதாரணமான விஷயம் அல்ல.
சாரங்கன்