வணக்கம்
வெண்முரசுவை நீங்கள் எழுத ஆரம்பித்த பொழுது என் வாழ்க்கையில் எற்பட்ட சில கொந்தளிப்பான சூழ்நிலைகளால் வெண்முரசுவை நீங்கள் எழுத எழுத வாசிக்க முடியாமல் போயிற்று. சிறிது காலம் கழித்து வந்து பார்த்த பொழுது நீங்கள் வெண்முரசுவில் மிக முன்னோக்கி சென்று விட்டீர்கள். ஆகையால் நான் ஆரம்பத்தில் இருந்து வாசித்து வந்து உங்களை பிடிப்பது என்பது முடியாத காரியமாக எனக்கு தோன்றியது. மேலும் மலைப்பாக இருந்தது. இதுவே நீங்கள் தினந்தோறும் வெளியிட வெளியிட நான் தினந்தோறும் வாசித்து இருந்தால் இப்பொழுது நானும் வெண்முரசுவை வாசித்து முடிக்கும் தருவாயில் இருந்திருப்பேன். இப்பொழுது முதலாவிண்ணை நீங்கள் வெளியிட வெளியிட தினந்தோறும் வாசித்து வருகிறேன். முதலாவிண்ணை வாசிக்கும் பொழுது வெண்முரசு எவ்வளவு பெரிய ஆக்கம் என்பதை உணர்ந்து பிரமித்து போயுள்ளேன். ஒரு இசைக்கலைஞர் சிம்பொனி அமைப்பது எவ்வளவு பெரிய வேலையோ / சாதனையோ , அதற்கு ஒப்பானது இந்த வெண்முரசு ஆக்கம் என்று நான் உணர்கிறேன்.
இப்பொழுது வெண்முரசுவை ஆரம்பத்தில் இருந்து வாசிக்க ஆரம்பித்துள்ளேன். தினமும் கொஞ்சம் கொஞ்சமாக. நிச்சயம் வாசித்து முடிப்பேன் என்று உறுதியாக நம்புகிறேன்.
பணிவன்புடன்
பெருமாள்
கரூர்