Saturday, July 25, 2020

ஐந்தாம் வேதம்


அன்புள்ள ஜெ

வெண்முரசின் தொடக்கத்திலேயே ஐந்தாவது வேதம் எழுவதன் சித்திரம் வந்துகொண்டே இருந்தது. அந்த ஐந்தாவது வேதம் எது என்ற கேள்வி எல்லாரிடமும் இருந்தது. நாராயணவேதம் என அது சொல்லப்பட்டது. நாவல் முடிவில் அது எது என்று சொல்லப்பட்டுவிட்டது. மகாபாரதமே ஒட்டுமொத்தமாக இன்றைக்கு ஐந்தாவது வேதம் என்று சொல்லப்படுகிறது. ஆனால் கீதை- சாந்திபர்வம்- அனுசாசனபர்வம் ஆகிய மூன்றும்தான் ஐந்தாவதுவேதம் என்று வெண்முரசு சொல்கிறது. கீதையின் இரு சிறகுகள் சாந்திபர்வமும் அனுசாசன பர்வமும். மகாபாரதத்தை தொடர்ச்சியாக வாசிப்பவன் என்றவகையில் இது சரியான பார்வை என்றே நானும் நினைக்கிறேன்

டி.எம்.ராஜன்