இன்று முழுவதும் குருபூர்ணிமா நிகழ்ச்சி மற்றும் தங்களையே நினைத்து கொண்டிருந்தேன்... நான் தங்களுக்கு எழுதிய அணைத்து கடிதத்தையும் படித்துக்கொண்டிருந்தேன்; வெண்முரசு நிறைவடைகிறது என்கிற செய்தி கத்தை ஏற்படுத்துகிறது.
இதே போன்ற ஒரு மன நிலை எனக்கு ' பின் தொடரும் நிழலின் குரல்' நாவல் படித்து முடித்த பின்பும் ஏற்பட்டது; அந்த நாளை நினைத்து பார்க்கிறேன், அன்று முற்றிலும் உணவை தவிர்த்திக்கிறேன், வெறும் காபி யோடு மாட்டு நாளை கழித்தேன்.என்னை சுற்றி இருப்பவர்களுக்கு வாசிப்பு பழக்கம் கிடையாது, நீங்கள் என் வாழ்க்கையில்பெரிய விஷயங்களை எனக்குக் கற்றுக் கொடுத்தார்கள், அவை என் பார்வை கோணத்தை முற்றிலும் மாற்றியமைத்தது
வாழ்க்கை மாபெரும் அபத்தங்களை கொண்டிருக்கும், பெரிய பெரிய யல்கள் விளைவுகளை ஏற்படுத்தாமல் போகலாம், சிறிய செயல்கள் இந்த வாழ்க்கை என்னும் மாபெரும் மாய வலையை உலுக்கலாம், என்று போதித்தவர் நீங்கள். வெண்முரசு சபையிலோ / எந்த ஒரு இலக்கிய வாசக சந்திப்பிலோ பங்கு பெரும் தகுதி, யோக்கியதை எனக்கில்லை. ஆனால், உங்கள் எழுத்துக்களில் உள்ள தத்துவ சிந்தனைகளை, படித்து, அறிந்து கொண்டிருப்பவன். முதல் மாணாக்கனாக அல்ல கடைசி மாணாக்கனாக.
துரோணன் அர்ஜுனனை போர்வீரனாக 'உருவாக்கினார் ', ஓர் வித்தையை / அறிவைகற்றுக்கொடுத்தார் ;கிருஷ்ணர் 'அர்ஜுனனை' போர்வீரராக வாழ வைக்கிறார்...நான் என் காண்டபத்தை ஒரு நாலும் கீழே வைக்காமல்இருப்பதற்கு நீங்களே காரணம் வழிகாட்டி என்பவர் அக இருளை அவர்களின் எண்ணங்கள் மற்றும் அனுபவங்களின் விளக்கால் ஒளியை பரப்புகிறார்....
அந்த ஜென் கதையில் உள்ள ஒரு அணைய விளக்கை தங்களிடம் இருந்து பெற்று கொண்டே இருப்பேன் குருபூர்ணிமா வாழ்த்துக்கள் என்றும்
அன்புடன்
ராம்