நலந்தானே? 
வாழும் காலத்தில் நம் கண்முன்னே இப்படி ஒரு மகத்தான படைப்பு எழுந்து வருவதை பார்ப்பது சிலிர்ப்பூட்டும் அனுபவம். ஒட்டுமொத்த மானுட ஆற்றல் மேலேயே நம்பிக்கை கொள்ளச்செய்வது. இருப்பையே  ஒளிகொள்ளச்செய்வது. 
இதைப்போன்ற  சிகரம் ஒன்று ஒளிர்ந்தெழுவதை பார்க்கும் அனுபவம் இன்னும் பலதலைமுறைகளுக்கு கிடைக்காதென்றே நினைக்கிறேன்.  
ஒரு மாதவம்போல் நீங்கள் எழுதுவதை பார்த்திருக்கிறேன். நாள் முழுவதும் நடந்து, பல இடங்களை சுற்றிப்பார்த்து, நண்பர்களிடமும், இலக்கியக் கூட்டங்களிலும் பேசி இரவு 11 மணிக்கு அரைத்தூக்கத்தில் தள்ளாடி வீடுவந்து சேர்ந்த பிறகு, நீங்கள் புத்துயிர் கொண்டெழுந்து எழுதுவதை கண்டிருக்கிறேன். அதிகாலையில் துள்ளியெழுந்து உடனே உற்சாகத்துடன் எழுதத்தொடங்குவதை பார்த்திருக்கிறேன். இது மனித உடல்தானா, மனித மூளைதானா என்று திகைப்படைந்திருக்கிறேன். வரலா
வாழ்நாள் முழுவதும் நினைத்த நேரமெல்லாம் மகிழ்ச்சியையும், நிறைவையும் அளிக்கும் பெரும் பரிசை அளித்திருக்கிறீர்கள். எனக்குத்தெரிந்த வகையில் வெண்முரசுக்கும், உங்களுக்கும் இசையில் எப்படி நன்றி சொல்வது என்று நண்பர்களுடன் ஆலோசித்துக் கொண்டிருக்கிறேன்.  விரைவில் தொடர்பு கொள்கிறேன்.  நெஞ்சம் நிறைந்த நன்றிகள்! 
அன்புடன் 
ராஜன் சோமசுந்தரம் 
