Thursday, July 16, 2020

மீள்கை


அன்புள்ள ஜெ

களிற்றியானைநிரை நாவலில் அஸ்தினபுரி மீண்டும் உருவாகி வரும் சித்திரம் எனக்கு ஏன் அப்படி ஒரு மனநிறைவை அளித்தது என்று யோசித்துப்பார்க்கிறேன். எப்படியும் வாழ்க்கையை வாழத்தான் விரும்புகிறோம். மிகப்பெரிய அழிவுக்குப்பின்னால்கூட நமக்கு இன்னும் வாழ்க்கை வேண்டும் என்றுதான் தோன்றுகிறது. அதிலிருந்து நம்மால் தப்பவே முடியாது என நினைக்கிறேன்

நான் இறப்பு நடந்த வீடுகளை கவனித்திருக்கிறேன். குடும்பத்தலைவர் இறப்பது போல கொடுமையான சாவுகளுக்கு பின்னால் அந்த வீடு கொஞ்சம் கொஞ்சமாக மீண்டுவிடும். ஆரம்பகட்ட சிரமங்களைக் கடந்துவிட்டால் அந்த குடும்பம் கொஞ்சம் மேலேகூட வந்துவிடும். ஆனால் இளைஞர்களின் சாவுக்குப்பின் முதியவர்கள் மீள்வதில்லை. இந்த மீள்வதற்கான துடிப்பைத்தான் அஸ்தினபுரியில் காண்கிறேன்

ஆர்.முத்துராஜ்