அன்புள்ள ஜெ,
தகைவுகொள்ளுதல் என்றால் என்ன?
"என் ஊழ் தகைவுகொள்ளவில்லை என்று கொள்கிறேன்” என்று யுதிஷ்டிரன் கூறினார்.
நான் வழக்கமாக பார்க்கும் அகராதிகளில் stress, தடை (restraint), இளைப்பு (Fatigue, Weariness) போன்ற பொருள்களே கொடுக்கப்பட்டிருக்கின்றன.
நன்றி
கார்த்திகேயன்
தகு என்னும் வேர்ச்சொல் வளைதலை குறிக்கிறது
தகைவு என்றால் இசைவு, நெகிழ்வு
தகுதி என்ற சொல்லின் இன்னொரு வடிவம்
தகைமை என்னும் சொல்லின் தொழில்பெயர்
ஜெயமோகன்