Wednesday, August 5, 2020

கொடை


அன்புள்ள ஜெ

\மீண்டும் சென்று பிரயாகையில் துருபதனை அர்ஜுனன் கட்டி இழுத்துவரும் இடத்தை வாசித்துக்கொண்டிருந்தேன். அந்த இடம் அன்றும் என்னை கொந்தளிக்க வைத்தது. அப்போது துருபதன் அடைந்த அந்தச் சிறுமைக்காக மனம் கொதித்தேன். ஆனால் இன்றைக்கு வாசிக்கும்போது அதில் உச்சகட்ட கொடுமை என்பது துரோணர் அளிக்கும் ‘கொடை’தான்.

நீ என் நண்பனாகவே நீடிக்கவேண்டுமென எண்ணுகிறேன். அதற்கு நீ எனக்கு சமானமானவன் ஆகவேண்டும். எனவே பாஞ்சாலத்தின் பாதியை உனக்கு அளிக்கிறேன். கங்கை முதல் சர்மாவதி வரையிலான தட்சிணபாஞ்சாலத்தை உனக்குரிய நாடாகக் கொள். காம்பில்யமும் மாகந்தியும் உனக்குரியவை. சத்ராவதியும் உத்தரபாஞ்சாலமும் எனக்குரியவை. என் மகன் அதற்கு அரசனாவான். என்ன சொல்கிறாய்?”

என்று அவர் சொல்லும் இடத்திலிருக்கும் கீழ்மையை தாண்டிச்செல்லவே முடியவில்லை. அதற்கு அவர் கடைசியில் கழுத்தறுபட்டுச் சாவதுகூட சரிதான் என்று தோன்றிவிட்டது

ஜி.எஸ்.மணிகண்டன்