அன்புள்ள ஜெ,
வெண்முகில்நகரத்தில் திரௌபதியைச் சொல்லும்போது
ஏனென்றால் அவள் பேரன்னை. அன்னையில் கனிந்திருப்பதே கன்னியில் பொலிந்திருக்கிறது. அதை விரும்பாத மானுடர் இருக்கவியலாது.என்ற வரி வருகிறது. அந்த
வரி அன்று எனக்கு மிகவும் அதிர்ச்சி அளித்த வரி. அந்த வகையான வரிகள் நம்மைவிட்டுப்
போவதே இல்லை. ஏதோ ஒரு முள்போல தைத்து மனதில் உறைந்திருக்கின்றன.அந்த வரியை முழுமையாக
புரிந்துகொள்ள வெண்முரசு முடியவேண்டியிருந்தது. பேரன்னை என்பவள் பெருங்கருணையைப்போலவே
பெருங்காமமும் பெரிய ஆணவமும் கொண்டவள். அவளிடமிருந்து ஆண்களுக்கு தப்பித்தலே இல்லை.
நான் அதை என் வகுப்பில் கூறியபோது என் ஆசிரியர் சொன்னார். நம்முடைய மரபிலேயேகூட அன்னைதெய்வங்களே
காமாட்சி என்றும் காமரூபிணி என்றும் வர்ணிக்கப்படுகின்றனர் என்று. அந்த வரியைக்கொண்டுதான்
திரௌபதியைப்புரிந்துகொள்ள முடியும்
சத்யமூர்த்தி